பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்

மருத்துவத் துறையில் அதானி குழுமத்துடன் கைகோர்க்கும் மேற்கு வங்கம்!

நியூ டவுனில் அதிநவீன மருத்துவமனை பற்றி...

Adani Group to reshape industrial, healthcare l

அதானி குழுமத்துடன் கைகோர்க்கும் மேற்கு வங்கம் - X

Published On :

மேற்கு வங்கத்தில் தொழில் துறை, சுகாதாரத் துறைகளை மறுசீரமைத்து மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள நியூ டவுன் பகுதியில் அதானி குழுமத்தால் கட்டப்படவுள்ள 2,000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு முதல்வரும், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

கடந்த மே மாதம் பதவியேற்ற பிறகு, மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு அதானியிடம் தான் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சில மாதங்களிலேயே அதானி குழுமம் இந்தச் சுகாதாரத் திட்டத்தை அறிவித்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, மாநிலத்தின் தொழில்துறையை மீட்டெடுக்க உதவுமாறு அதானியிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.

நியூ டவுன் பகுதியில் நவீன சுகாதார வசதி ஒன்றை அமைப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக கௌதம் அதானியிடம் கூறியிருந்தேன். இதனிடையே சில மாதங்களிலேயே, இத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையில் உள்ள மொத்த படுக்கை வசதிகளில் பாதியை, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்காக இலவசமாக ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். எதிர்காலத்தில் இது நவீன உயர்தர சிறப்பு மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாகவும் திகழும். மேலும், எதிர்கால மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், கிழக்கு, வடகிழக்கு பிராந்தியங்கள் பயனடையவும் உதவும் என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கான தங்கும் வசதிகள், விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் ஆகியவற்றுடன் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளையும் கொண்ட ஒரு முழுமையான ஒருங்கிணைந்த சுகாதார நகரமாக இந்த வளாகம் காலப்போக்கில் வளர்ச்சியடையும்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மருத்துவச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் இந்த வசதி அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

மருத்துவமனைத் திட்டத்தைத் தாண்டி, பாரம்பரியமிக்க 'ரைட்டர்ஸ் பில்டிங்ஸ்' கட்டடத்தைப் புதுப்பிப்பதிலும், மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜையுடனான தொடர்பிலும் அதானி குழுமம் மேற்கு வங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதல்வர் சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.