பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்

நடுநிலையான விசாரணை தேவை! மும்பை ஐஐடிக்கு எதிராகக் களமிறங்கும் இளைஞர் காங்கிரஸ்!

மாணவர் மரணத்துக்கு நடுநிலை விசாரணை வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது பற்றி.

Student suicide

ஐஐடி மும்பை - கோப்புப் படம்

Published On :

மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வகோடேவின் தற்கொலை விவகாரத்தில், நிறுவன இயக்குநர், பேராசிரியர் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இவ்வழக்கில் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் உதய் பானு சிப் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

ஐஐடி மும்பை மாணவர் வகோடே, சாதி ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதே அவர் தற்கொலை முடிவெடுக்கக் காரணமாக அமைந்தது.

இரண்டாமாண்டு பி.டெக் மாணவர் வகோடே ஏஐ பயன்படுத்தி பிடிபட்ட நிலையில், அன்று மாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அவரது பெற்றர் சாதி ரீதியான பாகுபாடு, துன்புறுத்தல் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இடந்தக் குற்றச்சாட்டுகளைக் கல்வி நிறுவனம் மறுத்துள்ளது.

மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா, டீன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனம் நடத்தும் விசாரணை நடுநிலையானதாக இல்லை, எனவே ஐஐடி மும்பை இயக்குநர், பேராசிரியர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வேண்டும்.

குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வகோடேவின் மடிக்கணினி, செல்போன், பிற மின்னணு சாதனங்களில் உள்ள தரவுகளை அவரது குடும்பத்தினரிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும்.

மாணவர் சாஹிலுக்கு நீதி கிடைக்கும் வரை இளைஞர் காங்கிரஸ் தனது போராட்டத்தைத் தொடரும்.

இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவனின் பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாகவும், தங்கள் மகனுக்கு நீதி கிடைக்கக் காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.