டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்குப் புதிய தலைவா் நியமனம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் கே.பண்டாரி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

மன்தீப் கே. பண்டாரி

Published On :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் கே.பண்டாரி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

நிகழாண்டு நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் திரையில் மதிப்பீடு செய்யப்பட்டதில் எழுந்த குளறுபடிகள் காரணமாக சிபிஎஸ்இ தலைவராக இருந்த ராகுல் சிங் மாற்றப்பட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகண்டே பிரசாந்த் சீதாராமனுக்கு கடந்த ஜூன் 2-ஆம் தேதி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜூலை 2-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் சீதாராம் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சிபிஎஸ்இயின் புதிய தலைவராக மன்தீப் கே.பண்டாரியை நியமிக்க மத்திய அமைச்சக நியமனக் குழு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

2001 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான மன்தீப் பண்டாரி தற்போது ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரின் முதன்மைச் செயலராகப் பணியாற்றி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.