
இன்ஃப்ளூயன்சர்களுக்கு தேர்தல் பிரசார நிதி! பாஜக வெளியிட்ட பட்டியலில் முக்கிய பிரபலங்கள்!
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு தேர்தல் பிரசார நிதி வழங்கியதாக பாஜக வெளியிட்ட பட்டியல் பற்றி...

Center-Center-Bangalore
தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்திருக்கும் தேர்தல் செலவினக் கணக்குப் பட்டியலில், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்தும் கூறப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டமான ஜனவரி - மே வரை பாஜக செலவிட்ட தேர்தல் செலவினக் கணக்கில், ஏராளமான சமூக வலைத்தளப் பிரபலங்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய நிதி ஒதுக்கியதாகத் தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ரூ.529.38 கோடி செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்திருக்கிறது. இந்த ஒட்டுமொத்த தொகையில் பாதிக்கும் மேல் அதாவது ரூ.287 கோடியை மேற்கு வங்கத்தில் செலவிட்டிருக்கிறது. அதில் பிரசாரத்துக்காக செலவிட்டது ரூ.217.2 கோடி.
மிச்ச தொகையைத்தான் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களுக்கு பிரித்து செலவிட்டிருக்கிறது.
பாஜகவின் செலவினக் கணக்குப் பட்டியலில் சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் பாஜகவுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் அவர்களின் விவரங்களும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் நேரத்தில் ரூ.1,494 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேரத்ல் முடிந்த பிறகு, கட்சியின் கையிருப்பு தொகை ரூ.7,689.06 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரபலமும், தங்களது சமூக வலைத்தளக் கணக்கில் பாஜகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிரான கருத்துகளுக்கு ஆதரவான விடியோக்களையும் உருவாக்கி வெளியிட்டதற்காக சில லட்சங்களை கூலியாகப் பெற்றிருக்கிறார்கள்.
ஒரு பிரபலம் இரண்டு விடியோக்களை வெளியிட்டு ரூ.2.5 லட்சத்தை கூலியாக பெற்றிருக்கிறாராம். அதுபோல, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகம் குறைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விடியோ வெளியிட்டு வந்த பிரபலமும் பாஜகவிடம் கூலி வாங்கியவர்தானாம்.
கட்சிகளிடம் நிதி பெற்றுக் கொண்டு விடியோ வெளியிடுவது பல ஆண்டுகளாக இருக்கிறது, இது ஒன்றும் சட்டவிரோதமோ, நியாயமற்றதோ இல்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். பணத்துக்கா எந்த தவறான தகவலையும் நாங்கள் வெளியிடவில்லை என்றும் தங்கள் தரப்பு நியாயத்தை ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நபரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு பாஜக தரப்பிலிருந்து இதுவரை ரூ.13 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாம். சில பிரச்னைகளை விஸ்வரூபம் ஆக்கி, மக்களின் கவனத்தை திசை திருப்பிய சில பிரபலங்கள், அந்த பிரச்னைகள் எல்லாம் இயற்கையானது, அதற்கும் பாஜகவிடமிருந்து பணம் பெற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சத்தியம் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.
இதுநாள்வரை, இவர்களது விடியோக்களையும் கருத்துகளையும் நேரத்தை செலவிட்டு பார்த்து வந்த மக்கள் பலரும், என்ன, இவர்கள் எல்லாம் பாஜக இன்ஃப்ளூயன்சர்களா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Summary
Election campaign funds for influencers! Prominent celebrities feature in the list released by the BJP!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




