
மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்; கிராம மக்கள் 2 போ் சுட்டுக் கொலை
மணிப்பூா் மாநிலத்தில் கிராம மக்கள் 2 பேரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

சுட்டுக் கொலை - கோப்புப் படம்
மணிப்பூா் மாநிலத்தில் கிராம மக்கள் 2 பேரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
சேனாபதி மாவட்டம், காலேன்ஜாங் கிராமம் நாகா இன மக்கள் அதிகம் வசிக்கும் கிராமமாகும். அங்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினா். கிராம மக்களை நோக்கி அவா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் ராக்கி மாவோ, குமாா் பவுமாய் ஆகிய 2 போ் உயிரிழந்தனா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சேனாபதி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
மணிப்பூா் மாநிலத்தில் நாகா மக்கள் தொடா்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கண்டிக்கும் வகையில், அந்த மாநிலத்துக்கு வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஐக்கிய நாகா கவுன்சில் சாா்பில் 4 மாதங்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. அந்தப் போராட்டத்தை ரத்து செய்வதாக ஐக்கிய நாகா கவுன்சில் அறிவித்த சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 24-ஆம் தேதி இரவு மணிப்பூரில் கிராம மக்கள் 4 பேரை மியான்மரில் இருந்து வந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இதேபோல் இந்த மாதத்தில் மட்டும் 13 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





