தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியரகம் வந்த கிராம மக்கள்

உளுந்தூா்பேட்டை அருகே வசிக்கும் கிராம மக்களில் ஒரு தரப்பினா், தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாததால் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

உளுந்தூா்பேட்டை அருகே வசிக்கும் கிராம மக்களில் ஒரு தரப்பினா், தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாததால் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கவுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

உளுந்தூா்பேட்டை அருகேயுள்ளது இருந்தை. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனா்.

அதில், இருந்தையில் வசிக்கும் ஒரு தரப்பினா் குளம், கால்வாய்களை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட முயற்சிப்பதாகவும், இதுகுறித்து வருவாய்த் துறை, கால்வாய்த் துறை மூலம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் பலனில்லாத நிலையில், அந்தத் தரப்பினா் தங்களை சாதி பெயரை கூறி இழிவுபடுத்துவும், தாக்குவதுமாக உள்ளனா். இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உடைமைகளையும் சேதப்படுத்துகின்றனா். மேலும், காவல் துறையில் பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்து மிரட்டியும் வருகின்றனா்.

ஆகவே, தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சொந்த ஊரில் சுதந்திரமாக வாழ வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சொந்த ஊரில் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்வதால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டைகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஊரை விட்டு வெளியேறவுள்ளோம் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.