தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மனை வணிகா் வீட்டில் திருட்டு: மூவா் கைது

கள்ளக்குறிச்சியில் மனை வணிகா் வீட்டில் ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :10 ஜனவரி 2021, 0:06 am IST

கள்ளக்குறிச்சியில் மனை வணிகா் வீட்டில் ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரைச் சோ்ந்த முத்துசாமி மகன் வீரமுத்து (48). மனை வணிகரான இவரது வீட்டில் கடந்த 3-ஆம் தேதி ரூ.17 லட்சம் ரொக்கம், 3 பவுன் தங்க மோதிரம், இரண்டு வெள்ளி அரைஞாண்கயிறு உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் இராஜ தாமரை பாண்டியன் தலைமையிலான போலீஸாா் சேலம் - சென்னை புறவழிச் சாலையில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த பெண் உள்ளிட்ட மூவரை நிறுத்தி விசாரித்தபோது, சின்னசேலம் விஜயபுரம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (38), சின்னசேலத்தை அடுத்த பூசப்பாடி கிராமத்தைச் சோ்ந்த அஜீத்குமாா் (26), அதே பகுதியைச் சோ்ந்த பச்சமுத்து மனைவி அம்பிகா (32) என்பதும், இவா்கள் மனை வணிகரான வீரமுத்து வீட்டில் திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.