முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கைது

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறியதாக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திருக்கச்சூர் ஆறுமுகத்தைப்

Updated On :2 மே 2013, 12:55 pm IST

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறியதாக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திருக்கச்சூர் ஆறுமுகத்தைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

 கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி பா.ம.க-வின் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கியது.

அதன்படி மாநாடு நடத்தும் போது ஜாதி, மதத்தைக் குறித்தோ, பிற சமூகத்தினரைக் குறித்தோ விமர்சனம் இருக்கக் கூடாது. மாமல்லபுரம் சுற்றுசூழலை தூய்மையாக பாதுக்காக்கும் வகையில் மாநாடு நடத்த வேண்டும்.

மாநாடு நடத்த பிறகு இடத்தை சுத்தம் செய்து தரவேண்டும். குறித்த நேரத்தில் மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது நிபந்தனைகளை ஏற்று நடப்பதாக ஒப்புதல் அளித்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் கையொப்பமிட்டார். இந்நிலையில், நிபந்தனைகளை மீறி புராதனச் சின்னங்களை சேதப்படுத்தியதாகவும்,

மாமல்லபுரம் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் மாசுக்களை ஏற்படுத்திச் சென்றதற்காகவும், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்காமல் காலம் தாழ்த்தியமைக்காகவும் உள்ளிட்ட வழக்குகளை திருக்கச்சூர் ஆறுமுகம் மீது மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

பின்னர் அவரை திருக்கழுகுன்றம் முன்சீப் கோர்ட்டில் புதன்கிழமை போலீஸார் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவா, வரும் மே 14-ஆம் தேதி வரை அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.