முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பக்கிங்காம் கால்வாய் மீதான பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: பி. விஸ்வநாதன்

செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினத்தில் பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்படும் சாலைப்பால கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று

Updated On :2 மே 2013, 12:52 pm IST

செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினத்தில் பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்படும் சாலைப்பால கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் பி. விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் அவை விதி 377-இன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கை:

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 58-இல் உள்ள சதுரங்கபட்டினம் வழியாக பக்கிங்காம் கால்வாய் கடந்து செல்கிறது.

இந்தக் கால்வாயில் இருந்த பாலம் 100 ஆண்டுகள் பழைமையானது என்பதால் அதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட நபார்ட் அமைப்பின் ஊரகச் சாலைத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக 2010-ஆம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தமும் ஏற்பட்டது.

கட்டுமானப் பணியை 2011-ஆம் ஆண்டு நவம்பருக்குள் முடிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் தாமதமாகி வருகின்றன.

பணியைக் கண்காணிக்க வேண்டிய துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  பாலப் பணிக்காகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே, நபார்டு அதிகாரிகள் உடனடியாக இப்பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.