இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சமூக நல்லிணக்க நாள் விழா

ராஜீவ்காந்தியின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:14 am IST

ராஜீவ்காந்தியின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் சமூக நல்லிணக்க நாள் விழா மற்றும் நிறுவனத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா மைய

வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷விழாவுக்கு மையத்தின் துணைத்தலைவர் சி.ஆர்.கேசவன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் இணைச்செயலர் சுதீர்குமார் முன்னிலை வகித்தார்.

÷பிரதமரின் மக்கள் தொடர்பு கட்டமைப்பு மற்றும் புதுமைகள் துறையின் ஆலோசகரும் தேசிய புதுமைக் குழுவின் தலைவருமான சாம்பிட்ரோடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

÷அவர் பேசுகையில், தற்போது கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நாட்டில் உள்ள 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை தொடர்பு துறை மூலமாக இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், இந்த தொழில்நுட்ப வசதிகளை அரசுத் துறை நிறுவனங்கள் தற்போது செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார். ÷விழாவில் பங்கேற்ற அனைவரும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.   ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தின் பதிவாளர் ஜெயலட்சுமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.