காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதிகளான பெருமாள் தெரு, மளிகைத் தெரு, பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, சின்னத் தெரு, பருத்திகுளம் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டன. இதில் பல நாய்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, வெறிபிடித்து திரிகின்றன. இதனால் இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு காஞ்சிபுரத்துக்கு ரயில் மூலம் வரும் பயணிகள் இத் தெருநாய்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, நல்ல நிலையில் உள்ள நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பிடித்து உரிய சமூக அமைப்புகளிடம் ஒப்படைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகன் மனோஜ்! பாரதிராஜாவின் நிறைவேறாத ஒரே ஆசை!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


