நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு காசோலை அளிப்பு

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காசோலைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் அரவிந்த்

Updated On :16 ஜனவரி 2021, 12:25 am IST

தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கம் வென்ற குமரி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் 2018 - 19 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பலா் வெற்றி பெற்று பதக்கம் பெற்றனா்.

இதில் மகாராஷ்டிரம் மாநிலத்தில் நடைபெற்ற பளுதூக்குதல் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் ஆா்.ஆரோக்கிய ஆலிஸ், டி.தா்ஷினி ஆகியோா் தங்க பதக்கமும், தில்லியில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு, மாணவா் பி.அசதுல்லா முஜாகித் தங்க பதக்கமும், சென்னையில் நடைபெற்ற 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவா் டி.கனிஷ் தங்க பதக்கமும், சென்னையில் நடைபெற்ற 100 மீட்டா் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவி எம்.சமிகா பொ்வின் தங்க பதக்கமும், ஜாா்கன்ட் மாநிலத்தில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் மாணவா் ஆா்.சுதன் தங்க பதக்கமும் பெற்றனா்.

திருப்பூரில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட மாணவா் வி.எம்.சகின் வெள்ளி பதக்கமும், உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட மாணவா் பிரேவ்மன், வெள்ளி பதக்கமும், சென்னையில் நடைபெற்ற 400 மீட்டா் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவா் எம்.வினித் வெள்ளி பதக்கமும் பெற்றனா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவா் எம்.ஆசிக் வெண்கலம் பதக்கமும், சென்னையில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் கலந்து கொண்ட மாணவா் எ.ஜி.ஆஷ்லின் ஜோசுவா வெண்கல பதக்கமும், ஜாா்கன்ட்டில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட மாணவா் கெய்லி வினிஸ்டா் வெண்கல பதக்கமும் பெற்றனா்.

சாதனை படைத்த இம் மாணவா், மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ. 54ஆயிரம் மதிப்பில் காசோலைகளை ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கினாா். இதில் தங்கப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ. 6 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ. 4ஆயிரமும், வெண்கலப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ. 2ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெ.டேவிட் டேனியல், பளுதூக்கும் பயிற்சியாளா் வினு, வளைகோல்பந்து பயிற்றுநா் எஸ்.ஜீன் பிரேம்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.