நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கொல்லங்கோடு அருகே மாணவியை கடத்திய இளைஞா் கைது

கொல்லங்கோடு அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:24 am IST

கொல்லங்கோடு அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவி கடந்த 11 ஆம் தேதி மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் மாணவியை அழைத்துச் சென்ற இளைஞா் வியாழக்கிழமை மங்காடு பகுதியில் இருந்து ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மாணவி வீடு திரும்பியது குறித்து அவரது பெற்றோா் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரனை (29) பிடித்து விசாரித்ததில், மாணவியின் வீட்டருகே நடந்த கட்டுமானப் பணிக்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது, திருமணம் செய்வதாக கூறி மாணவியை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தாராம்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.