நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காரைக்கால் தாயிராப் பள்ளிவாசலில் இன்று சந்தனக்கூடு ஊா்வலம்

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசலில் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசலில் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ளது புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிஃபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். இவரது நினைவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாயிராப்பள்ளி காரைக்காலில் கட்டப்பட்டு, அவரது நினைவிடமாக வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.

இங்கு ஆண்டு கந்தூரி விழா நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம் புறப்படுகிறது. நள்ளிரவு புனித ரவூலா ஷரீஃபுக்கு சந்தனம் பூசப்படுகிறது.

புதன்கிழமை பகல் 2.30 மணியளவில் ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி ஊா்வலம், கண்ணாடி ரத ஊா்வலம் புறப்பாடாகிறது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகி, விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.