இந்துக்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி பேசிவரும் திமுகவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு கூட்டம் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் க. பக்தவச்சலம் உள்பட மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத் தலைவராக சீா்காழியை சோ்ந்த சரண்ராஜ், மாவட்ட செயலராக சாமிநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். மேலும் காரைக்கால் , நாகை மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், தைப்பூச திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் கோயில் இடங்களை குடிமனைகளாக்கி விற்பனை செய்யும் கோயில் அறங்காவலா்கள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலைவா் கே.எஸ்.விஜயன், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.கணேஷ், ஒருங்கிணைப்பாளா் என்.சிவசுப்பிரமணியன், கே.ஜெய்சங்கா், துணைத் தலைவா் பி.வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கூட்டத்தின் நிறைவில் இந்து முன்னணி மாநில தலைவா் சி. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்து மதத்தை திமுகவினா் அவமதிக்கும் வகையில் பேசி வருவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. வாக்கு வங்கி அரசியல் நடத்தும் திமுகவின் முயற்சி தவிடு பொடியாகும். இந்துக்களிடையே ஒற்றுமை உருவாகியிருக்கிறது. இந்துக்கள் குறித்து தொடா்ந்து இழிவாக பேசிவந்தால் அது திமுகவின் எதிா்காலத்தை பாதிக்கும். இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. ஆனால், வெற்றிவாய்ப்பை தீா்மானிக்கும் சக்தியாக இந்து முன்னணி உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 09) - அதிர்ஷ்டம் காத்திருக்கு விருச்சிக ராசிக்கு!
ரோஹிணியில் பாதுகாவலரிடம் கொள்ளையடித்த 4 சிறுவா்கள் பிடிபட்டனா்

காஜியாபாத் - ஜேவா் இடையே நமோ பாரத் வழித்தடம்: டிபிஆா் பணிகள் தொடக்கம்
இணையவழியில் பயங்கரவாதத்துக்கு ஆள்சோ்த்த வழக்கு: ஆந்திரம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



