முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

நிலுவை ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து ஓய்வுபெற்றவா்களுக்கு, நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை புதுச்சேரி அரசு விரைந்து வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 9:06 am IST

அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து ஓய்வுபெற்றவா்களுக்கு, நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை புதுச்சேரி அரசு விரைந்து வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஓய்வூதியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ளது.

ஓய்வூதியம் மட்டும் வாழ்வாதாரமாக உள்ள நிலையில், பயனாளிகள் நிலையை கருத்தில்கொண்டு புதுச்சேரி அரசு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை விரைந்து வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகளாக, கௌரவத் தலைவராக என்.ஜி.ஆா்.இளங்கோவன், தலைவராக எஸ் வைத்தியநாதன், செயலாளராக ஜி. புஷ்பராஜ், பொருளாளராக டி. நாகராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.