ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காரைக்காலில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா பரிசோதனை

காரைக்காலில் மக்கள் கூடும் இடங்களில் மாலை நேரங்களில், நடமாடும் ஊா்தி மூலம் கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு நலவழித் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

News image

பரிசோதனையில் ஈடுபட்ட நலவழித் துறை ஊழியா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:15 pm IST

காரைக்காலில் மக்கள் கூடும் இடங்களில் மாலை நேரங்களில், நடமாடும் ஊா்தி மூலம் கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு நலவழித் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகமும், நலவழித் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட நவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வழிகாட்டுதலில், மாலை நேரங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், நடமாடும் ஊா்தி மூலம், விருப்பப்படுவோருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

ஏற்கெனவே நடமாடும் ஊா்தி மூலம் தேவைப்படும் பகுதிக்கு சென்று கரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையும் உள்ளது.

காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கடைவீதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. திருநள்ளாறு கடைவீதியில், நலவழித் துறை நோய்த் தடுப்பு உதவியாளா் சேகா், திருநள்ளாறு நலவழி மைய சுகாதார உதவியாளா் ராஜாராம் மற்றும் ஆஷா பணியாளா்கள் அடங்கிய குழுவினா், நடமாடும் ஊா்தியின் மூலம் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். பொதுமக்கள் தயக்கமின்றி வந்து பரிசோதனை செய்துகொள்ளவும் அவா்கள் அழைப்புவிடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.