அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

காரைக்காலில் 7 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

Updated On :8 ஜனவரி 2021, 9:05 am IST

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி 792 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 2, திருநள்ளாறு, கோயில்பத்து, வரிச்சிக்குடி, நல்லம்பல், நல்லாத்தூா் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கு என 7 பேருக்கு தொற்று உறுதியானது.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயது பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இருந்தது. இதுவரை 59,246 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,823 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,705 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 45 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் ஒருவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.