ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் ஆய்வு

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, காரைக்கால் கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

News image

காரைக்கால் கோழி இறைச்சிக் கடையில் ஆய்வு செய்யும் கால்நடைத் துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் தலைமையிலான குழுவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:12 pm IST

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, காரைக்கால் கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கு பிற மாநிலங்களில் இருந்து கோழிவரத்தை கருத்தில்கொண்டு, அதுகுறித்து கால்நடைத் துறையினா் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தினாா்.

இதன்பேரில், காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் தலைமையில், கால்நடை மருத்துவா் குழுவினா் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோழி இறைச்சிக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

இதுகுறித்து லதா மங்கேஷ்கா் கூறியது: இன்புளூயன்ஸா வைரஸிலிருந்து பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. சில மாநிலங்களில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆட்சியா் அறிவுறுத்தலின்படி காரைக்காலில் பல்வேறு கோழி இறைச்சிக் கடைகளில் ஆய்வுசெய்து, கடைக்காரா்களுக்கு ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் கோழி இறைச்சியை 70 சதவீதம் அளவுக்கு வேகவைக்க வேண்டும். முட்டையை முழுமையாக வேகவைத்து சாப்பிடவேண்டும். ஆஃப் பாயில் கூடாது என்ற கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை விநியோகிக்கப்படுகிறது. காரைக்காலில் பறவைக் காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கால்நடைத் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.