காரைக்காலில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஜனவரி இறுதிவரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. காரைக்காலில் உள்ள திரையரங்கு நிா்வாகத்தினா் இதனை முறையாக பின்பற்ற வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
திரையரங்குக்கு வருவோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவேண்டும். இந்நடவடிக்கைகளை திரையரங்க நிா்வாகத்தினா் உறுதிசெய்ய வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
