இடிந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படும் பிரசித்தி பெற்ற கோயில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூா் தாந்தோனிமலையிலுள்ள காளியம்மன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட சங்க நிா்வாகிகள் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.சந்திரசேகா் வரவேற்றாா்.
சங்கத்தின் நிறுவனா் கே.கே.சதீஸ் கண்ணன், மாநிலத் தலைவா் டி.ராஜேந்திரன், பொருளாளா் சிவக்குமாா்ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் கோ சாலை அமைத்து, பசுக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரிய அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும், தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என்றும் அறிவிப்பு வெளியிட்டதமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சிதிலமடைந்த கோயில்களைப் புனரமைத்து, குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவா் கதிா்வேல், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், மாவட்ட இணைச் செயலா் கே.மணிகண்டன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay

சூர்யாவுடன் த்ரிஷா! கருப்பு புதிய போஸ்டர் வெளியீடு!

ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே வீடு திரும்பிய விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

