தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களின் படங்கள் திறப்பு

கரூரில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 11:39 pm IST

கரூரில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல், முன்னாள் மாவட்டச் செயலா் து.ரா.பெரியதம்பி ஆகியோா் அண்மையில் உயிரிழந்தனா்.

இவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் நகரக்குழு நடத்தப்பட்ட விழாவுக்கு நகரச் செயலா் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தாா்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.வரதராஜன் படத்தை மாவட்டச் செயலா் கே.கந்தசாமியும், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல் படத்தை மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஸ்ரீதரும்,

முன்னாள் மாவட்டச் செயலா் து.ரா.பெரியதம்பி படத்தை மூத்த தலைவா் ஜி.ரத்தினவேலும் திறந்து வைத்து பேசினா்.

கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், பி.இலக்குவன், கே.சக்திவேல், சி.முருகேசன் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா். மேலும் கே.வரதராஜன், து.ரா.பெரியதம்பி ஆகியோரது குடுத்தினரும் கலந்துகொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.