முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நீதிக் கதைகள்! வயிற்றுக்கு ஆகாரம் கட்டாயம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

story

நீதிக் கதைகள்! வயிற்றுக்கு ஆகாரம் கட்டாயம்! - படம்: சிறுவர் மணி

Published On :

வீட்டில் கோபி தன்னுடைய மனைவி சாந்தாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

"நீ பிள்ளையை வளர்க்கும் விதம் சரியில்லை. குழந்தையிடம் கனிவோடு இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக அவனை இப்படி வளர்க்கக் கூடாது.... உனக்கு அவனை கட்டாயப் படுத்தத் தெரியலே...." என்றான் உரக்க.

கூடத்தில் இருந்த பெரியவர் சண்முகம் வருத்தப்பட்டார்.

"சின்னப் பிள்ளையை எதுக்குக் கட்டாயப் படுத்தி வளர்க்கச் சொல்றான்?.....

இவனை நான் கண்டிச்சுக் கட்டாயப்படுத்தியா வளர்த்தேன்?... இவன் வளர்ந்து ஆளாகலயா?... ஏன் இப்படிச் சத்தம் போடறானோ தெரியலயே.." என்று யோசித்தவர், மருமகள் சாந்தாவிடம் கேட்டே விட்டார்.

"என்ன நடக்கிறது நம்ம வீட்ல? ஏன் இப்படி கத்தறான்?

என் பேரன் எப்பவும் புத்தகத்தை வச்சுப் படிச்சிட்டே தானே இருக்கான்... வேற என்ன செய்யணும்னு இவன் எதிர் பார்க்கறான்? அதிகமான கண்டிப்பும் கட்டாயமும் கெடுதல்னு அவன் கிட்ட எடுத்துச் சொல்லு.."

அதற்கு மருமகள் அமைதியாகப் பதிலைச் சொன்னாள்; "மாமா நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்கல..

உங்க பேரன் சதா சர்வ காலமும் படிப்பு படிப்புன்னு முதல் ராங்க் வாங்கி ஆகணும்னு படிச்சிட்டே இருக்கான்..

சாப்பிட அவனுக்கு நேரம் இல்லையாம்.....ஒரு வாய் சாதத்தைக் கூட கட்டாயப் படுத்தி தான் ஊட்ட வேண்டி இருக்கு.. அதைத் தான் உங்க பிள்ளை சொல்லிட்டுப் போறார்... ." என்றாள் அவள்.

பெரியவர் சிரித்தபடி எழுந்து, சிறுவனின் அருகே வந்து நின்று வாஞ்சையுடன் சொன்னார்:

"வயிற்றுக்கு ஆகாரம் போட்டால்தான் செல்லம் படிப்பும் நல்லா வரும். வா, எழுந்து வந்து சாப்பிடு.. நல்ல பிள்ளை இல்லே நீ?"

சிறுவனும் சாப்பிட எழுந்து வந்தான்.

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.