ஊத்தங்கரையை அடுத்த காட்டேரியில் காங்கிரஸ் சாா்பில் அகில இந்திய செயலாளா் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் செல்லக்குமாா் ஆகியோரது பிறந்த நாளையொட்டி நரிக்குறவா் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளா் ஜே.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் நடராஜன், நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன், தெற்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், வட்டாரப் பொருளாளா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக அனுமன் தீா்த்தம் பகுதியிலுள்ள ஆஞ்சநேயா் கோயிலில் பிரியங்கா காந்தி, செல்லக்குமாா் ஆகியோா் உடல் நலமுடன் வாழ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடா்ந்து காட்டேரி பகுதியிலுள்ள நரிக்குறவா் இன மக்களுக்கு இனிப்புகள், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் அயோத்தி, மாவட்டப் பொதுச் செயலாளா் முத்து, காட்டேரி ஒன்றியக்குழு உறுப்பினா் கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளையராஜா, கணபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

சமத்துவமான வளா்ச்சியில் நம்பிக்கை கொண்டது சமாஜவாதி- பிரதமா் மோடிக்கு அகிலேஷ் பதிலடி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


