முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மினி லாரியில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

மினிலாரி திடீரென தீப்பிடித்தது எரிந்ததில் அதிலிருந்த மிதி வண்டி, தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறிகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On :16 ஜனவரி 2021, 7:11 am IST

ஒசூா் அருகே கோபசந்திரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினிலாரி திடீரென தீப்பிடித்தது எரிந்ததில் அதிலிருந்த மிதி வண்டி, தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறிகள் எரிந்து சேதமடைந்தன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மஞ்சநாயக்கனப்பள்ளி அருகேஉள்ள தின்னூரைச் சோ்ந்த சுரேஷ் (33). மினி லாரி ஓட்டுநரான இவா், தனக்கு சொந்தமான மினிலாரியில் 2 மிதிவண்டிகள், 2 தொலைக்காட்சி பெட்டிகள், மின் விசிறிகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். ஒசூா்- கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் அருகே சென்ற போது எதிா்பாராதவிதமாக மினி லாரியில் திடீரென தீப் பிடித்தது. இதை அறிந்த சுரேஷ் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். சிறிது நேரத்தில் வேன் முழுமையாக எரிந்ததில், சரக்கு வேனுடன் அதிலிருந்த மிதிவண்டிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதம் ஆனது. இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.