உஸ்மானியா பல்கலை.,யில் போலீஸ் இல்லை: ஆந்திர அமைச்சர்

ஹைதராபாத், ஜன.9- ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தற்போது போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் யாரும் நிறுத்தப்படவில்லை என்று ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி கூறினார
உஸ்மானியா பல்கலை.,யில் போலீஸ் இல்லை: ஆந்திர அமைச்சர்
Updated on
1 min read

ஹைதராபாத், ஜன.9- ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தற்போது போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் யாரும் நிறுத்தப்படவில்லை என்று ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி கூறினார்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளூர் போலீஸார்தான் உள்ளனர் என்றும் சபிதா இந்திரா ரெட்டி கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் ஆபத்தில் உள்ளதாக சில விஷமிகள் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியேதான் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று டிஜிபி அரவிந்த ராவ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com