ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ராணுவப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஒத்திகை: குன்னூரில் பரபரப்பு

குன்னூர், நவ.9: குன்னூர் ராணுவ குடியிருப்புப் பகுதிகளில் 2 தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் பரவியதை அடுத்து ராணுவ வீரர்கள், குன்னூர் காவல் துறையினர், அதிரடிபடை வீரர்கள் என்று அனைவரும் ஒன்றுசேர்ந்து தேடு

Updated On :19 செப்டம்பர் 2012, 11:19 pm

குன்னூர், நவ.9: குன்னூர் ராணுவ குடியிருப்புப் பகுதிகளில் 2 தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் பரவியதை அடுத்து ராணுவ வீரர்கள், குன்னூர் காவல் துறையினர், அதிரடிபடை வீரர்கள் என்று அனைவரும் ஒன்றுசேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக குன்னூரில் பரபரப்பு நிலவியது.

குன்னூரில் புதன்கிழமை 2 தீவிரவாதிகள் ராணுவ குடியிருப்பு பகுதிகளில்  ஊடுருவியதாக செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து குர்கா ஹில் பகுதியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள்,குன்னூர் காவல் துறையினர், அதிரடிப்படை வீரர்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுப்பட்டனர், இதனைத் தொடர்ந்து குன்னூர் டி.டி.கே சாலை, மனெக்சா பாலம், பேரக்ஸ் செல்லும் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் ராணுவம் மற்றும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன,

இதனைத் தொடர்ந்து இப் பகுதிகளுக்குள் செல்வதற்கு பொதுமக்கள், வாகனங்கள், உள்ளிட்டவை அனைத்தும் தடைசெய்யப்பட்டன. இதன் காரணமாக மூன்று மணி நேரம் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் இது ஒத்திகை நிகழ்ச்சி என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.