45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி - வேன் மோதல் ஒருவர் பலி, 22 பேர் படுகாயம்.

ஸ்ரீபெரும்புதூர்,  அக்  3: ஒரகடம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:43 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்,  அக்  3: ஒரகடம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், எழுச்சூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 25 பெண் தொழிலாளர்கள் படப்பை பகுதியில் உள்ள தனியார் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வேன் மூலமாக வேலைக்குச் சென்று வருவது வழக்கம். அதே போல் திங்கள்கிழமை விடியற்காலையில்  25 பெண் தொழிலாளர்கள் வேலைக்கு வேனில் வந்து கொண்டிருந்துள்ளனர். வேன் வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாக ஒரகடம் பகுதியில் வந்தபோது சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது இதில் பலத்த காயம் அடைந்த உள்ளாவூர் பகுதியைச் சேர்ந்த அம்மு(20) சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் கொங்கனாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரேமா(25), அனிதா(27),அருள்மணி(30), பார்வதி உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் எட்டுபேர் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 14 பேர் படப்பை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.