ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எஞ்சின் கோளாறு: சென்னை வரும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தாமதம்

சிதம்பரம், அக்.16: திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிதம்பரத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் கிளம்பத் தாமதம் ஆனது. வழக்கமாக காலை 6.27க்கு சிதம்பரம்

Updated On :19 செப்டம்பர் 2012, 11:56 pm

சிதம்பரம், அக்.16: திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிதம்பரத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் கிளம்பத் தாமதம் ஆனது.

வழக்கமாக காலை 6.27க்கு சிதம்பரம் வரவேண்டிய திருச்செந்தூர் -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டு உடனே கிளம்பிவிடும். ஆனால், சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, இஞ்சினில் முக்கியமான ஆக்சில் ஒன்று துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அதனை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், கோளாறு சரிசெய்ய இயலாத நிலையில், மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டது. பின்னர் மாற்று இஞ்சின் உதவியுடன் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதாகப் புறப்பட்டுச் சென்றது. வழக்கமாக 11.40க்கு சென்னைக்கு வந்து சேரவேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 1 மணி அளவில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.