ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பரங்குன்றம் : வேலை வாய்ப்பு உறுதித் திட்டப் பணிகள் புறக்கணிப்பு

திருப்பரங்குன்றம் ஊராட்சியில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளக் கூடிய பணிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2012, 5:31 am

மது

திருப்பரங்குன்றம் ஊராட்சியில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளக் கூடிய பணிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் ஊராட்சிமன்றத் தலைவர், கிளர்க் மற்றும் களப் பொறுப்பாளர் ஆகியோர் மீது அப்பகுதி மேற்பார்வை அதிகாரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், மத்திய அரசின் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் 180 பேர் பணியாற்றுகின்றனர். பணிக்கு வரும் ஒவ்வொருத்தரிடமும் தினமும் கையெழுத்து வாங்க வேண்டும். ஆனால் தான் ஆய்வு மேற்கொண்ட அன்றைய தினம், 80 பேரிடம்தான் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். மீதம் 100 பேரிடம் கையெழுத்து வாங்கவில்லை. எனவே, இதில் முறைகேடு நடப்பதாக மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துவிட்டார்.

அதை எதிர்த்தும், வழக்கு திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறி, வேலை வாய்ப்பு உறுதி திட்டப் பணிகளை புறக்கணித்து குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் தலைமையில் இன்று புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.