துரை தயாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்
தலைமறைவாக இருந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, இன்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


தலைமறைவாக இருந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, இன்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றத்தில், துரை தயாநிதிக்கு 2 பேர் இருநபர் ஜாமீன் கொடுத்தனர். இதையடுத்து அவருக்கு நீதிபதி ஜெயக்குமார் ஜாமீன் அளித்தார். இதைத் தொடர்ந்து நாளை முதல் தினமும் காலை 10 மணிக்கு கீழவளவு காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. துரைதயாநிதி தனது பாஸ்போர்ட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது, கிரானைட் முறைகேட்டு புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தலைமறைவாக இருந்த துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு முன்ஜாமீன் அளித்து பிடிவாரண்ட்டையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...