கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயக்கத்தின் விளைவு, தூக்கமில்லாமல் மக்கள் அவதியுறுகின்றனர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதிமுகவிற்கு மயக்கத்தில் வாக்களித்ததின் விளைவு, மக்கள் தற்போது தூக்கமில்லாமல் அவுதியுறுகின்றனர் என திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்

News image
Updated On :18 டிசம்பர் 2012, 5:51 pm

ஜி.சுந்தரராஜன்

அதிமுகவிற்கு மயக்கத்தில் வாக்களித்ததின் விளைவு, மக்கள் தற்போது தூக்கமில்லாமல் அவுதியுறுகின்றனர் என திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மின்வெட்டை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகே நகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் செவ்வாய்க்கினமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவர் பேசியது: தேர்தல் நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என ஜெயலலிதா பொய்யான வாக்குறுதியை அளித்தார். அதை நம்பி வாக்களித்த மக்கள் தற்போது கடும் மின்வெட்டினால் அவதியுற்று வரும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் 2 மணி நேரம்தான் மின்வெட்டு செய்யப்பட்டது. தற்போது 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. மின்வெட்டினால் அரிசி பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. வைக்கோல் கிடைக்காமல் கால்நடைகள் அவதிக்குள்ளாகியுள்ளன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மர்மகாய்ச்சல், விவாசயம் பாதிப்பு ஆகியவற்றால் மக்கள் பயந்து வாழும் நிலை உள்ளது. திருப்பூரில் அனைத்து தொழில்களுக்கு முடங்கிப் போய் வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீரின்றி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளை சரி செய்ய முடியாத ஜெயலலிதா மத்தியஅரசை குறை கூறி வருகிறார். சம்சாரம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம், ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளினால் மாதந்தோறும் போராட்டம் நடத்த ஆட்சியாளர்களால் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாள் தோறும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் கீரை.வீரமணி, முன்னாள் எம்எல்ஏக்கள் துரை.கி.சரவணன், மருதூர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், குமராட்சி ஒன்றியச் செயலாளர் ரா.மாமல்லன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பூபாலன்,  மாவட்ட பிரதிநிதிகள் மாயாமச்சேந்திரன், ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ஜேம்ஸ்விஜயராகவன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், துணை அமைப்பாளர்கள் முத்துக்குமார், பன்னீர்செல்வம், திருமால், நகரமன்ற உறுப்பினர்கள் ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், கோ.நடராஜன், ஏ.ஆர்.சி.மணிகண்டன், சி.வி.வெங்கடேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.