ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் திருமாறன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன், நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, காங்கிரஸ் கட்சி மாநில சேவைதள கூடுதல் தலைமை அமைப்பாளர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். உடலை பெற மறுத்து தொடர் முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சிதம்பரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஈஸ்வரன் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.