பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் நஞ்சய கவுண்டன்புதூரில் இன்று காலை திடீரென புகை வந்துள்ளது. சாலையின் ஒரு புறத்தில் இருந்து எழுந்த புகையால், மக்கள் பீதி அடைந்து என்ன என்று பார்த்தனர். அப்போது அங்கே யாரோ கந்தக அமிலத்தை கொட்டிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் அதிகமானது. இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் அந்த இடத்தைப் பார்வையிட்டு, கந்தக அமிலத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடித்து, நிலைமையை சீராக்கி வருகின்றனர்.