பிஆர்பி குவாரியை நடத்த 4 வார இடைக்காலத் தடை
மதுரையில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட பிஆர்பி குவாரியை நடத்த 4 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மதுரையில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஆர்பி குவாரியை நடத்த 4 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் சீலை அகற்றுவதற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பிஆர்பி குவாரியை நடத்த 4 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4 வாரத்துக்குள் பிஆர்பி கிரானைட் குவாரி மீதான விசாரணை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்த வழக்கு விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.
உத்தரவில், பிஆர்பி கிரானைட் குவாரி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.
மதுரையில் கிரானைட் கற்களை விதிமுறைகளை மீறி வெட்டி எடுத்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில், பிஆர்பி கிரானைட் குவாரிக்கு வைத்த சீலை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற மதுரைக் கிளை நீதிமன்றம், சீலை அகற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...