கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வங்கியில் ரு.2 லட்சம் கடன் பெற்று மோசடி: மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கைது

சிதம்பரத்தில் வங்கி ரூ.2 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக மகளிர் சுயஉதவிக்குழுத் தலைவியை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :11 நவம்பர் 2012, 4:03 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் வங்கி ரூ.2 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக மகளிர் சுயஉதவிக்குழுத் தலைவியை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் தாகம் தீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஷீலா (48). இவர் கவிதா, மில்காசிபேகம், மற்றும் மஞ்சுளா உள்ளிட 20 பெண்களை உறுப்பினராக சேர்த்து மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கினார். குழுவிற்கு ஷீலா தலைவியாக இருந்துள்ளார். சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்காக தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனாக வழங்க, கடந்த ஜூலை மாதம் ரு.2 லட்சத்தை கடனாக வங்கி மூலம் பெற்றுள்ளார். ஆனால் பணத்தை ஷீலா, கவிதா,மில்காசிபேகம் ஆகிய மூவரும் பிரித்து எடுத்து கொண்டு மற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சுளா என்ற பெண் சிதம்பரத் நகர காவல் நிலையத்தில் புகாரின் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவி ஷீலா கைது செய்யப்பட்டார். மேலும் கவிதா, மில்காசிபேகம் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.