கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜாதிவெறி கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

தருமபுரியில் ஜாதிவெறியுடன் சில அரசியல் கட்சிகள் நடந்து கொள்கின்றன. எனவே அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

News image
Updated On :15 நவம்பர் 2012, 2:57 pm

ஜி.சுந்தரராஜன்

தருமபுரியில் ஜாதிவெறியுடன் சில அரசியல் கட்சிகள் நடந்து கொள்கின்றன. எனவே அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியது...

தென், வட மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதிலும் ஜாதி வெறியாட்டங்கள், சமூக விரோத செயல்கள் அதிகளவு நடந்து வருகின்றன.

தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடையே மோதலை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வது கூடாது என சில அரசியல் கட்சிகள் மேடையில் பேசி வருகின்றன.

தருமபுரியில் பட்டப்பகலில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன. 6 மணி நேரம் இச்சம்பவம் நடந்துள்ளது. இதைக் கண்டித்து நவம்பர் 19-ம் தேதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தருமபுரியில் நவம்பர் 21-ம் தேதியும், கடலூரில் 23-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ துரை.ரவிக்குமார், மாவட்டச் செயலர்கள் பா.தாமரைச்செல்வன் (கடலூர்), வ.க.செல்லப்பன் (சிதம்பரம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.