அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் நவ.26 முதல் தொடக்கம்: துணைவேந்தர் எம்.ராமநாதன் தகவல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்களுக்கான தேர்வுகள் நவ.26-ம் தேதியும்,


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்களுக்கான தேர்வுகள் நவ.26-ம் தேதியும், மற்ற அனைத்து புல மாணவர்களுக்கான தேர்வுகள் நவ.30-ம் தேதியும் தொடங்கப்படுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தினால் பல்கலைக்கழக வகுப்புகளும், தேர்வுகளும் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தேர்வுகள் நடைபெறும் தேதியையும், வகுப்புகள் தொடங்கும் தேதியையும் அறிவித்துள்ளார்.
விவரம்: மருத்துவப்புலம் மற்றும் பல் மருத்துவப்புலம், பிஎட் மற்றும் அனைத்துறை ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற நவ.21-ம் தேதி முதல் தொடங்கப்படும். வேளாண்புல முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிச.14-ம் தேதியும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு டிச.5-ம் தேதியும் எழுத்துத்தேர்வுகள் (Theory Exam) தொடங்கப்படும். வேளாண்புல மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் (Practicle Exam) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ.26-ம் தேதியும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ.21-ம் தேதியும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு நவ.26-ம் தேதியும் தொடங்கப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...