ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பரங்குன்றத்தில் வேல் வழங்கும் விழா: இன்று சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சந்தசஷ்டி விழாவையொட்டி சனிக்கிழமை இரவு வேல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து

News image
Updated On :18 நவம்பர் 2012, 5:48 am

மது

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சந்தசஷ்டி விழாவையொட்டி சனிக்கிழமை இரவு வேல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப் பட்டது. பின்பு மாலை 6.45 மணிக்கு சுவாமி அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அதேசமயம் மூலவர் சன்னதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சூரனை வதம் செய்ய கேவர்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கப்பட்டது. முன்னதாக நம்பிநாயர் பட்டர் பிச்சைக்கண்ணுக்கு பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் அளிக்கப்பட்டது.அதன்பின்னர் கோயில் ஸ்தானிகப் பட்டரான செல்லப்பா பட்டர், சுப்பிரமணியசுவாமிக்கு நவரத்தின சக்திவேலை அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார். அதன்பின் சுப்பிரமணியசுவாமி பூச்சப்பர அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

இன்று சூரசம்ஹாரம்: ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.