ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஹாங்காங் ஓபன்: 2ஆவது சுற்றில் சாய்னா

ஹாங்காங்கில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அப்ரில்லாவை நேர் செட்களில் வீழ்த்தினார் சாய்னா. இந்த ஆட்டத்தில் முதல் செட்டைக் கைப்பற்ற

News image
Updated On :21 நவம்பர் 2012, 12:25 pm

ஏ.வி. பெருமாள்

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சாய்னா நெவால்.

ஹாங்காங்கில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அப்ரில்லாவை நேர் செட்களில் வீழ்த்தினார் சாய்னா. இந்த ஆட்டத்தில் முதல் செட்டைக் கைப்பற்ற இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 22-20 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார் சாய்னா. 2ஆவது செட்டை 21-8 என்ற கணக்கில் எளிதாக வென்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா.

அதேபோல் ஆடவர் பிரிவில் காஷ்யப், டென்மார்க்கின் ஜான் ஜார்சென்ஸனை 24-22, 20-22, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராமும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இவர் சீனாவின் ùஸன்மிங் வாங்கை 22-20, 23-21 என்ற நேர் செட்களில் போராடி வென்றார்.

இரட்டையர் பிரிவில்  பிரணாவ் சோப்ரா மற்றும் சிகி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி அமெரிக்காவின் பிலிப் ஷீவ், ஜெமிய் ஷுபன்தி ஜோடியை 21-18, 21-23 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் தருண், அஸ்வின் பொன்னப்பா 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஷென் ஸý மற்றும் ஜின் ஜோடியிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.