சிதம்பரத்தில் பேருந்து நிலைய வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் வாபஸ்
சிதம்பரம் தந்தை பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து நவ.20-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.


சிதம்பரம் தந்தை பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து நவ.20-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுட்டனர். கடந்த 3 தினங்களாக பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
தமிழக அரசு சுற்றுலா பகுதியாக சிதம்பரம் நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் அருகே அரசு காமராஜர் மருத்துவமனை உள்ளது. தினந்தோறும் இரவு, பகலாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறக்கக்கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளதை கண்டித்து இந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை அமைதி பேச்சு வார்த்தைக் கூட்டம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஏஎஸ்பி எம்.துரை, வட்டாட்சியர் க.தனசிங், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மோட்டார் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், ராஜேந்திரன், சேகர், பஸ் நிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தனுஷ்கோடி, செல்வராஜ், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 11 மணி முதல் 12 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மீண்டும் காலை 3 மணிக்கு திறக்க வேண்டும் என்றும், கடைகளை அதன் உரிமையாளர்கள் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் கோப்பை மற்றும் பைகளை பயன்படுத்தக்கூடாது, பிளாட்பாரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...