கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு மர்மஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.15ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

News image
Updated On :27 நவம்பர் 2012, 10:01 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு மர்மஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.15ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இக்கடையின் விற்பனையாளராக சண்முகம் என்பவர் உள்ளார். திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடைந்ததை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். திங்கள்கிழமை நள்ளிரவு மர்மஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் 12 ஆயிரம் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில்களும், 3.500 மதிப்புள்ள அரை பாட்டில்களும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து விற்பனையாளர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.