ரயிலில் அடிபட்டு பல்கலை. மாணவர் சாவு
சிதம்பரத்தில் ரயிலில் அடிபட்டு பல்கலை. மாணவர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.


சிதம்பரத்தில் ரயிலில் அடிபட்டு பல்கலை. மாணவர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மேன்சிங் செளத்திரி மகன் அங்கூர்சிங் செளத்திரி (20). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் பாரதிநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பிஇ மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் சனிக்கிழமை மாலை பாரதிநகர் அருகே செல்போனை பேசிக்கொண்டு ரயில்பாதையை கடந்துள்ளார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் அவர் மேதியது. இவ்விபத்தில் மாணவர் அங்கூர்சிங் செளத்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...