கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் கொள்ளை!

சிதம்பரம் அருகே பல்கலைக்கழக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 22 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

News image
Updated On :28 அக்டோபர் 2012, 1:43 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பல்கலைக்கழக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 22 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (33). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவர் சனிக்கிழமை இரவு மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு சீர்காழியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்றார். திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து மரபீரோவிலிருந்த 22 பவுன் நகைகள் திருடிச்சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து கார்த்திக் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.