மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து : 3 பேர் பலி

மேலூர், செப்., 15 : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளரிப்பட்டை கிராமத்தில் உள்ள தனியார் டயர் தெழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மதுர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:25 am

தர்மராஜ்

மேலூர், செப்., 15 : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளரிப்பட்டை கிராமத்தில் உள்ள தனியார் டயர் தெழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளரிப்பட்டையில் உள்ள ஸ்ரீ சக்ரா டயர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணிக்கு வேலை துவங்கியது. சுமார் 8 மணிக்கு தொழிற்சாலையின் கெமிக்கல் கலவைப் பிரிவில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அங்கு உடன் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கெமிக்கல் பிரிவு என்பதால், சுமார் 30 அடி நீளமுள்ள ஷெட் முழுமையாக எரிந்து நாசமானது. இதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களில் ஒரு உடல் மட்டுமே அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தது. அது கல்லம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பது தெரிய வந்துள்ளது. இருவரது உடல் எரிந்து சாம்பலான நிலையில் அவர்களது விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மண்டல டிஎஸ்பி, வட்டாட்சியர் வசந்தா ஜூலியட் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.