தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை பற்றி தமிழக அரசு கூறிய கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது குறித்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று உச்சநீதிமன்ற விசாரணையின் போது அறிவித்தது. ஆனால், இந்த கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், புதிய அறிக்கையை ஏற்க முடியாது. இதுபோன்ற எந்த நடவடிக்கைகளும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



