முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

டீசல் விலை உயர்வு: முதல்வர் கண்டனம்

17.01.2013 அன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்ட போதே

News image
Updated On :1 ஜூலை 2013, 8:49 pm IST

 டீசல் விலை உயர்வு, சாதாரண சாமானிய மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

17.01.2013 அன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்ட போதே, அதனை நான் ஒரு அறிக்கை வாயிலாகக் கண்டித்தேன். இந்த முடிவு டீசல் விலை ஏற்றத்திற்குத் தான் வழிவகுக்குமே அல்லாமல், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்காது என்றும், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்திக் கொண்டு வரும் நிலை தான் டீசலுக்கும் இனி ஏற்படும் என்றும் எச்சரித்து, ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற கொள்கை முடிவினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினேன்.ஏழை எளிய மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறையில்லாத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இதற்கு செவி சாய்க்கவில்லை. அதன் பலனாக, எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மாதாமாதம் சில்லறை விற்பனைக்கான டீசல் விலையினை உயர்த்தி வருகின்றன.மாதாமாதம் டீசல் விலையை உயர்த்தி வரும் எண்ணெய் நிறுவனங்கள், இன்றுநள்ளிரவு முதல் டீசல் விலையை மேலும் லிட்டருக்கு 50 காசுகள் என்ற வீதத்தில் உயர்த்தியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் விலை ஆகியவற்றைக் காரணம் காட்டி, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மாதாமாதம் இவ்வாறு டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவது,“தேளுக்கு இடம் கொடுத்தால், ஜாமத்துக்கு ஜாமம் கொட்டும்” என்ற பழமொழியைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, அதன் காரணமாக வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்குவதாகவே இந்த விலை உயர்வு அமையும். இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பது, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை, ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கை ஆகிய பல்வேறு காரணங்களால் ஏற்பட்டது ஆகும்.இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த கையாலாகாத மத்திய அரசு தனது திறமையின்மையை சாதாரணமக்களின் மீது திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். அரசின் திறமையின்மையை எல்லாம் பொதுமக்கள் மீது திணிப்பது என்பது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல், பொதுமக்களிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டதையே காட்டுகிறது.இந்த டீசல் விலை உயர்வு வாகனக் கட்டணங்கள், அனைத்துப் பொருட்களின்விலைகள் ஆகியவை உயர வழிவகுக்கும். இதன் காரணமாக, விலைவாசி மேலும் உயரும்.சாமானிய மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும். எனவே, மத்திய காங்கிரஸ் கூட்டணிஅரசு, இந்த டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.