கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூட்டுறவு தேர்தலில் முறைகேட்டை கண்டித்து சாலைமறியல்

சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து வியாழக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2013, 1:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து வியாழக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம்  கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் குறியாமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து சுயேட்சையாக ஆயிபுரம் ஜெயச்சந்திரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை. இதனால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதை கண்டித்து கீழமணக்குடி, ஆயிபுரம், குறியாமங்கலம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே வியாழக்கிழமை மாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.