கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி முகத்தில் தலையணை வைத்து 22 பவுன் நகை கொள்ளை

சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை பட்டப்பகலில் மர்மஆசாமிகள் இருவர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து, வாயில் துணியை வைத்து அடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

News image
Updated On :4 ஏப்ரல் 2013, 11:07 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை பட்டப்பகலில் மர்மஆசாமிகள் இருவர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து, வாயில் துணியை வைத்து அடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நரசிம்மலுநாயுடு (85). இவரும் மனைவி பத்மாவதி (82) ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவரது மகன் ரமேஷ் புதுச்சேரியில் ரிசார்ட்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய மகன் ரமேஷ் அனுப்பியதாக இருவர் வீட்டிற்குள் நுழைந்தனர். நரசிம்மலு ஒருவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மற்றொருவன் வீட்டில் இருந்த மூதாட்சி பத்மாவதி அம்மாள் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும், வாயில் துணியை வைத்து அடைத்து 22 பவுன்கள் மதிப்பிலான அவரது கழுத்திலிருந்த தாலி செயின், டாலர் செயின், வளையல்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, மாடியிலிருந்து வந்த மற்றொருவனுடன் தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து நரசிம்மலு கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூதாட்சி பத்மாவதி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.