கோபியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கோபி புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜான்(58). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும் 20 குழந்தைகளுடன் வேனை ஓட்டிக் கொண்டு மொடச்சூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஜானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனயாக, வேனில் இருந்த பெண் உதவியாளரிடம் கூறிவிட்டு, வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், நெஞ்சுவலி அதிகமாகவே ஸ்டியரிங்கிலேயே படுத்துக் கொண்டார். உடனடியாக ஆம்புலென்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வேன் டிரைவர் ஜான் இறந்து விட்டதாக கூறினார். உயிர் போகும் நேரத்திலும் குழந்தைகளை காப்பற்றுவதற்காக வேனை பத்திரமாக சாலையோரம் நிறுத்திவிட்டு, தனது உயிரை விட்ட டிரைவர் ஜானை பொதுமக்கள் சோகத்துடன் பார்த்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

வாழை - 2 படத்தைத் தயாரிக்கும் நெட்பிளிக்ஸ்?

நிலமிழந்த காஸா விவசாயிகள் புரட்சி! டின்களில் காய்கறி செடிகள் வளர்த்து சாதனை

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


